அமெரிக்கா தீவிரம்

இஸ்லாமாபாத், ஜூலை 23:
: பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் ரெசா அமிரி மொகாதம் மீது, கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதால், பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஈரான் துாதராக ரெசா அமிரி மொகாதம், 2023ல் இருந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் எப்.பி.ஐ., சிறப்பு அதிகாரி ராபர்ட் பாபை கடத்திய வழக்கில் இவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ல் எப்.பி.ஐ., அதிகாரியான பாப், ஈரானில் தங்கியிருந்தார். கடைசியாக கிஷ் தீவில் காணப்பட்ட அவர், அதன் பின் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.