Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க அமைதிப் பேச்சு குழு பாகிஸ்தான் பயணம் ரத்து

அமெரிக்க அமைதிப் பேச்சு குழு பாகிஸ்தான் பயணம் ரத்து

வாஷிங்டன்: ஏப்ரல் 27-
ஈரான் போர் நிறுத்த ஒப்​பந்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த தனது சிறப்​புத் தூதர்​களை பாகிஸ்​தானுக்கு அனுப்​பும் திட்​டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்​துள்​ளார்.
ஈரானுடன் போர் நிறுத்​த ஒப்பந்தம் செய்​து கொள்வது தொடர்​பாக அமெரிக்க சிறப்​புத் தூதர் ஸ்டீவ் விட்​காஃப் மற்​றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் தரப்​புடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த பாகிஸ்​தான் செல்​ல​ இருந்தனர்.இந்​நிலை​யில், கடந்த சனிக்​கிழமை ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்​சி, பாகிஸ்​தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை மட்​டும் சந்​தித்​துப் பேசினார். அத்​துடன் அமெரிக்க பிரதிநிதிகளுடன் எந்​தச் சந்​திப்​பும் திட்​ட​மிடப்​பட​வில்​லை.
எங்​கள் தரப்பு நிலைப்​பாட்டை பாகிஸ்​தானிடம் கூறியருக்கிறோம். அவர்​கள்​தான் அமெரிக்​கா​விடம் கூற வேண்​டும் என்று ஈரான் வெளி​யுறவு அமைச்​சகம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தது. இதைத் தொடர்ந்​து, ஈரானிய தூதுக் குழு​வினர் பாகிஸ்​தானில் இருந்து வெளி​யேறினர்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ தளத்​தில் பதி​விட்​டுள்​ள​தாவது: பயணத்​துக்​காக அதிக நேரம் வீணடிக்கப்​படு​கிறது. இங்கே செய்ய வேண்​டிய வேலைகள் அதி​கம் உள்​ளன. ஈரானி​யத் தலை​மை​யிடம் பெரும் குழப்​ப​மும் மோதலும் நில​வு​கிறது. தங்​களுக்கு யார் தலைமை தாங்​கு​கிறார்​கள் என்​பதே அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. எனவே, சிறப்​புத் தூதர்​களை பாகிஸ்தானுக்கு அனுப்​பும் திட்டம் இல்லை. அனைத்​து சாதக​மான அம்​சங்​களும் நம்​மிடமே உள்​ளன.
அவர்​கள் பேச விரும்​பி​னால், எப்​போது வேண்​டு​மா​னாலும் அழைக்​கலாம். பேச்​சு​வார்த்​தையை ரத்து செய்த பிறகு ஈரான் தனது கோரிக்​கை​களில் சில மாற்​றங்​களைச் செய்துள்​ளது. ஆனால் அது போது​மான​தாக இல்​லை. ஒப்​பந்​தம் எட்​டப்​படும் வரை ஈரான் துறை​முகங்​கள் மீதான அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை தொடரும். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.சீனா​வுக்​குத் தடை இந்நிலையில், ஈரானிடம் இருந்து கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​பிலான கச்சா எண்​ணெய் வாங்​கிய​தாகக் கூறி சீனாவைச்​ சேர்​ந்​த ‘ஹெங்​லி பெட்​ரோ கெமிக்​கல்​‘ நிறு​வனத்​தின்​ மீது அமெரிக்​​கா பொருளா​தா​ரத்​ தடைகளை வி​தித்​துள்​ளது