Home செய்திகள் தேசிய செய்திகள் மே. வங்கத்தில் அமித் ஷா உறுதி

மே. வங்கத்தில் அமித் ஷா உறுதி

ரானாகாட், ஏப்ரல் 27- மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் ரானாகாட் தொகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வெற்றி செய்தி கிடைக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால், பல சட்டப்பூர்வமான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டு பலதார மணம் முடிவுக்கு கொண்டு வரப்படும். பெண்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.3,000 செலுத்தப்படும். பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.