Home செய்திகள் தேசிய செய்திகள் அருணாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

அருணாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

திஸ்பூர், ஆக. 16- அருணாச்சலில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் அங்​குள்ள அப்​பர் சுபன்​சிரி மாவட்​டத்​தில், கேயோஜரிங்​-ப​யாச்​சிங் சாலை கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வந்த இடத்​தில் பெரியளவில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இச்​சம்​பவத்​தில், 4 பேர் உயி​ரிழந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. திபாங் பள்​ளத்​தாக்கு மாவட்​டத்​தில் பெய்த கனமழை​யால் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில், பாசு பானி ராணுவ முகாமில் உள்ள 5-வது கிரெனடியர்ஸ் படைப் பிரி​வின் 2 தங்​குமிடங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதில் மாயமான 5 ராணுவ வீரர்​களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.