
புதுடெல்லி: ஜூலை 24 –
அல்காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) நேற்று கைது செய்துள்ளது.
இதுகுறித்து ஏடிஎஸ் டிஐஜி சுனில் ஜோஷி கூறியதாவது: நீண்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அல் காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடியாக கைது செய்துள்ளது.
2 தீவிரவாதிகள் குஜராத் அகமதாபாத் நகரிலிருந்தும், ஒருவர் டெல்லி மற்றும் ஒருவர் நொய்டாவிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ஃபைக், முகமது ஃபர்தீன், செஃபுல்லா குரேஷி, ஜீஸன் அலி என்ற அந்த நால்வரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நால்வரிடம் தீவிரவாத இயக்கங்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சுனில் ஜோஷி தெரிவித்தார்.