ஆகஸ்ட் முதல் நாளே தங்கம் விலையில் சரிவு

சென்னை: ஆகஸ்ட் 1-
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 1) சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ 73,200-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,150-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 குறைந்து, கிராம் ரூ 123-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது. ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 160 குறைந்து ஒரு கிராம் ரூ 9,150-க்கும், ஒரு சவரன் ரூ 73,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினங்களாக தங்கத்தின் விலையில் குறைந்து வந்தது.தற்போது திடீரென அதிகரித்தது.