ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா

ராஜ்கிர், ஆகஸ்ட் 30- ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்​கி​யில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 4-3 என்ற கோல் கணக்​கில் சீனாவை வீழ்த்​தி​யது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் ஹாட்​ரிக் கோல் அடித்​தார். பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகு​தி​யில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரி​வில் உள்ள இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் சீனா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி சார்​பில் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் 20, 33 மற்​றும் 47-வது நிமிடங்​களில் கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களை கோல்​களாக மாற்​றி​னார். ஆனால் அதேவேளை​யில் அவர், பெனால்டி ஸ்டிரோக்​கில் கோல் அடிக்க கிடைத்த எளி​தான வாய்ப்பை தவற​விட்​டார். முன்னதாக 18-வது நிமிடத்​தில் ஜுக்​ராஜ் சிங்​ பெனால்டி கார்​னர் வாய்ப்​பில் கோல் அடித்து பலம் சேர்த்​திருந்​தார். 11 பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களில், நான்கை மட்​டுமே இந்​திய அணி​யால் கோலாக மாற்ற முடிந்​தது சீன அணி தரப்​பில் ஷிஹாவோ டு (12-வது நிமிடம்), பென்​ஹால் சென் (35-வது நிமிடம்), ஜிஷெங் காவ் (41-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். மற்ற ஆட்​டங்​களில் கொரியா 7-0 என்ற கணக்​கில் சீன தைபேவை​யும், ஜப்​பான் 6-0 என்ற கணக்​கில் கஜகஸ்​தானை​யும், மலேசியா 4-1 என்ற கணக்​கில் வங்​கதேசத்​தை​யும் தோற்​கடித்​தன. இந்​தியா தனது 2-வது ஆட்​டத்​தில்​ நாளை ஜப்​பானுடன்​ மோதுகிறது.