
வாஷங்டன், நவ. 29- ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை, தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. பைடனின் பெரும்பாலான உத்தரவுகள் ஆட்டோபென் முறையில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆட்டோபென் முறையில் கையெழுத்திடும் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்புதல் வழங்கப்படாவிட்டால் ஆட்டோபென்னைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. ஓவல் அலுவலகத்தில் பைடனைச் சுற்றி வந்தவர்கள் அவரிடமிருந்து அதிபர் பதவியைப் பறித்தனர்.

















