ஆதார் அட்டையை ஏற்க மறுக்கும் அதிகாரிகள்! பீகாரில் சலசலப்பு

பாட்னா: ஜூலை 10 –
பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சிக்கல் என்னவெனில், பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டையை அதிகாரிகள் அடையாள சான்றாக அதிகாரிகள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 7.89 கோடி வாக்காளர்களில் 57% (4.5 கோடி) பேர் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்த 11 வகையான ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த 11 ஆவணங்களில் ஆதார் அட்டை சேர்க்கப்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பீகாரிலும் பாட்னா போன்ற நகர்புற பகுதிகளில் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு நகல் காண்பிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இதே நடைமுறை பீகாரின் கிராமப்புறங்களில் பின்பற்றப்படுவதில்லை. மிக குறிப்பாக ‘சீமாஞ்சல்’ பகுதியில் ஆதார் அட்டையை அடையாள சான்றாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதற்கு மாறாக பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் அல்லது பட்டா மாதிரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு? கிரம மக்களுக்கும் ‘சீமாஞ்சல்’ பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும் ஏன் ஆவணங்களை சரி பார்ப்பதில் இந்த அளவுக்கு பாரபட்சம்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. Powered By பீகார் மாநிலத்தின் ‘சீமாஞ்சல்’ பகுதிதான் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். ‘சீமாஞ்சல்’ என்பது பூர்ணியா, கட்டிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளை இது உள்ளடக்கி இருக்கிறது. இந்த பகுதிகள் மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்துடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது.
சாலை வசதி, போக்குவரத்து, சுகாதார வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை இங்கு அதிகம். “சில்லு சில்லாக போன 500 கோடி.. 5 ஏக்கர் பங்களாவில் வாழ்ந்த நடிகரின் பரிதாபம்.. சிவகுமார் சொல்லியுமா?” வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது திருத்துவது போன்ற அரசு சார்ந்த பணிகளுக்குத் தேவையான சரியான ஆவணங்கள் பல கிராமப்புற மக்களிடம் இல்லைஎன்பதே தற்போதைய பிரச்சனை. இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருப்பதால் மத்திய அரசு இந்த மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து கழற்றிவிட பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இங்குள்ள மக்களில் சிலர் வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்களாக இருக்கலாம் என்று பாஜகவின் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.