ஆந்திராவிலும் பெண்கள் இலவச பஸ் பயணம் – 15-ம் தேதி தொடக்கம்

அமராவதி: ஆக. 5-
‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.
அதன் பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி கூறிய​தாவது: சுதந்​திர தின​மான வரும் 15-ம் தேதி முதல், தேர்​தலில் கொடுத்த முக்​கிய வாக்​குறு​தி​களில் ஒன்​றான பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் அமல் படுத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ‘ஸ்ரீ சக்​தி’ என பெயரிட்​டுள்​ளார்.
இந்த ஸ்ரீ சக்தி திட்​டத்​துக்​காக 6,700 அரசு பேருந்​துகள் உபயோகப்​படுத்​தப்பட உள்​ளன. இத்​திட்​டத்தை நமது மாநிலத்​தில் அமல்​படுத்த, ஏற்கெனவே இத்​திட்​டம் அமலில் உள்ள தமிழ்​நாடு, கர்​நாட​கா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு குழு சென்று ஆய்வு நடத்​தி​யது.
ஆந்​திர மாநிலத்​தில் கிராமங்​கள் முதல் நகர்ப்​புறங்​கள், மாநகரங்​கள் வரை என அனைத்து இடங்​களுக்​கும் ‘ஜீரோ டிக்​கெட்’ முறை​யில் பெண்​கள் அரசுப் பேருந்​துகளில் இலவச​மாக பயணம் செய்​ய​லாம். பல்லெ வெலுகு, அல்ட்ரா பல்ல வெலுகு, எக்​ஸ்​பிரஸ், அல்ட்ரா எக்​ஸ்​பிரஸ் என அனைத்து பேருந்​துகளி​லும் பெண்​கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்​டை, வாக்​காளர் அடை​யாள அட்​டை, பாஸ்​போர்ட் என ஏதாவது ஒரு அடை​யாள அட்​டையை காண்​பித்து இலவச​மாக மாநிலம் முழு​வதும் பயணம் செய்​ய​லாம். இத்​திட்​டத்​துக்​காக அரசு ரூ.1,950 கோடி செல​விடு​கிறது. விரை​வில் 3,000 மின்​சார பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இதைத் தொடர்ந்து கூடு​தலாக 1,400 மின்​சா​ரப் பேருந்​துகளும் வாங்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர்​ எம்​. ராம்​பிர​சாத்​ ரெட்​டி தெரிவித்​தார்​.