ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு

புதுடில்லி: ஜூலை 9 –
2019 புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாதர் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பயன்படுத்தி வருவதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுப்பது, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது ஆகிய நோக்கங்களுடன் குரூப் 7 (ஜி 7) நாடுகளால் பைனான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் என்ற fatf சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் வர்த்தக தளங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.. நிதி சேகரிக்கவும், தங்கள் அமைப்பை வளர்க்கவும் சொகுசான வழிகளை பயங்கரவாதிகள் கையாண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் நிதி சார்ந்த தொழில்நுட்ப வசதிகள் விரைவான வளர்ச்சியை பயங்கரவாதிகள் நிதியை திரட்டுவதற்கான பல வழிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.