ஆப்கானிஸ்தான் – மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

காபூல்: ஜூலை 19-
நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நம் நாட்டின் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளன. இந்த 2 நாடுகளும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் அவ்வப்போது இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இருநாடுகளிலும் இன்று அதிகாலையில் திடீரென்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் 1.26 மணி மற்றும் அதிகாலை 2.11 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‛‛ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.26 மணிக்கு பூமிக்கடியில் 190 கிலோமீட்டர் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது எக்ஸ் பதிவில்,‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 125 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.11 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.