ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் விளாசலில்: கனடாவை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரகம்

புதுடெல்லி, பிப். 14- ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் ‘டி’ பிரிவில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் கனடா – ஐக்கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்ஷ் தாகர் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் விளாசி​னார். நவ்​னீத் தாலிவால் 34, ஸ்ரேயஸ் மோவா 21, கேப்​டன் தில்​பிரீத் பஜ்வா 11 ரன்​கள் சேர்த்​தனர். ஐக்​கிய அரபு அமீரக அணி தரப்​பில் ஜூனைத் சித்​திக் 4 ஓவர்​களை வீசி 35 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 151 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரக அணி 12.3 ஓவர்​களில் 4 விக்​கெட்கள் இழப்​புக்கு 66 ரன்​கள் எடுத்து தடு​மாறியது. அந்த சூழ்​நிலை​யில் ஆர்​யன்ஷ் சர்மா, சோஹைப் கான் ஆகியோர் அதிரடி​யாக விளையாடினர். கடைசி 4 ஓவர்​களில் ஐக்​கிய அரபு அமீரகத்​தின் வெற்​றிக்கு 56 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. டிலன் ஹெய்​லிகர் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்​களும், ஜஸ்கரன் சிங் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்​களும், கலீம் சனா வீசிய 19-வது ஓவரில் 18 ரன்​களை​யும் ஆர்​யன்ஷ் சர்மா, சோஹைப் கான் ஜோடி விளாசி மிரட்​டியது. இதனால் ஐக்​கிய அரபு அமீரக அணி 19.4 ஓவர்​களில் 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 151 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆர்​யன்ஷ் சர்மா 53 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 6 பவுண்டரிகளு​டன் 74 ரன்​களும் சோஹைப் கான் 29 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். முன்​ன​தாக கேப்​டன் முகமது வசீம் 4, அலிஷான் ஷராஃபு 5, மயங்க் குமார் 4, ஹர்​ஷித் கவுசிக் 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஐக்​கிய அரபு அமீரக அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் நியூஸிலாந்​திடம் தோல்வி அடைந்​திருந்​தது. அதேவேளை​யில் கனடா அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்​கா​விடம்​ வீழ்ந்திருந்​தது.