பெங்களூரு, ஜூலை 24 –
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆர்சிபி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் அறிக்கையின் பரிந்துரைகளையும் அமைச்சரவை அங்கீகரித்தது.
கூட்ட நெரிசல் வழக்கில் போலீசார் மீதுதான் தவறு. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட், முன்னாள் செயலாளர் ஏ. சங்கர், முன்னாள் பொருளாளர் ஜெயராம், ஆர்சிபி அணித் தலைவர் ராஜேஷ் மேனன், டிஎன்ஏ நெட்வொர்க் லிமிடெட் எம்டி வெங்கட் வர்தன், டிஎன்ஏ நெட்வொர்க் லிமிடெட் துணைத் தலைவர் சுனில் மாத்தூர் ஆகியோர் கிரிமினல் வழக்கு தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்திருப்பதால் அவர்களுக்கு அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி. தயானந்த், ஐபிஎஸ் அதிகாரிகள் விகாஸ் குமார், சேகர், கப்பன் பார்க் துணைப் பிரிவு ஏசிபி பாலகிருஷ்ணா, கப்பன் பார்க் போலீஸ் நிலைய ஐஐ கிரிஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் ஜூன் 4 ஆம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குன்ஹா அறிக்கை முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அது இறுதி செய்யப்படவில்லை எந்த நிலையில் கர்நாடக மந்திர் சபை மேற்கண்டவாறு முடிவு செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது