
கொழும்பு, பிப். 14- ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. தனது 11-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீரரரான பிரையன் பென்னட் 56 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான தடிவனாஷே மருமணி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு பிரையன் பென்னட், மருமணி ஜோடி 7.3 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ரியான் பர்ல் 30 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து கேமரூன் கிரீன் பந்தில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு பிரையன் பென்னட், ரியான் பர்ல் ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சிகந்தர் ராசா 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார். 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 29 ரன்களை சேப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஜோஷ் இங்லிஷ் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் பிளெசிங் முசராபானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காமல் பிராடு இவான்ஸ் பந்தில் நடையை கட்டினார்.அதிரடி வீரரான டிம் டேவிட் 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் முசராபானி பந்தில் வெளியேறினார். கேப்டன் டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில்,
3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் இவான்ஸ் பந்தில் போல்டானார். 29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல், மேட் ரென்ஷா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 77 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரியான் பர்ல் பிரித்தார். கிளென் மேக்ஸ்வெல் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பர்ல் பந்தில் போல்டானார். இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்களில் மசகட்சா பந்திலும், பென் டுவார்ஷுயிஸ் 6 ரன்களில் இவான்ஸ் பந்திலும் நடையை கட்டினர். 18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான இடைவேளையில் விக்கெட்கள் சரிந்த போதிலும் மேட் ரென்ஷா நம்பிக்கையுடன் விளையாடி தனது முதல் அரை சதத்தை கடந்தார். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவையாக இருந்தன.




















