ஆஸி. – தென் ஆப்பிரிக்கா மோதல்

கெய்ன்ஸ்: ஆக. 16- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 125 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். டி 20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகளும் இன்று (16-ம் தேதி) கடைசி மற்றும் 3-வது ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 2,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அங்கிதா சாதனை: இஸ்​ரேலில் கிராண்ட்​ஸ்​லாம் ஜெருசலேம் தடகளப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 2 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​சேஸில் இந்​தி​யா​வின் அங்​கிதா தியானி பந்தய தூரத்தை 6:13.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார்.இதற்கு முன்​னர் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 6:14.38 விநாடிகளில் கடந்​ததே தேசிய சாதனை​யாக இருந்​தது.