
மும்பை: ஆகஸ்ட் 10-
இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலும் (ODI) அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்து அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், பிசிசிஐயின் புதிய விதிமுறைகள் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐயின் புதிய நிபந்தனை இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால்,
வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ முன்பே கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவின்படி, ஒருநாள் அணிக்குத் தேர்வாக விரும்பும் வீரர்கள், இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு ஒருநாள் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவர்கள் ரஞ்சி டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ முன்பே கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவின்படி, ஒருநாள் அணிக்குத் தேர்வாக விரும்பும் வீரர்கள், இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு ஒருநாள் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவர்கள் ரஞ்சி டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.