
சென்னை: ஜூலை 4-
அதிமுகவில் இருந்து பல்வேறு கட்சிகளுக்கு இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் தவெகவிலும் திமுகவிலும் இணைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. கடந்த முறை இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அதிமுக கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 169 இடங்களில் போட்டியிட்டது.
65 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் அதிமுக 19 இடங்களில் டெபாசிட் இழந்தது. அதாவது தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6- ஒரு பங்கு வாக்குகளை பெற தவறுவோருக்கு டெபாசிட் தொகை கிடைக்காது. கடந்த காலங்களில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்துக் கொண்டே இருக்கும். 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அதிமுக இரு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலைில் அக்கட்சி தோல்வி அடைந்தது. திமுக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலிலாவது அதிமுக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஏமாற்றமே மிஞ்சியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியையே சந்தித்தது. இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இவ்வாறு தொடர் தோல்விகளால் அதிமுக நிர்வாகிகள் சோர்வடைந்து அக்கட்சியில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமைக்கான மோதலின் போது 7 சதவீத அதிமுகவினர் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். பிறகு ஓபிஎஸ்ஸும் தீர்க்கமான எந்த முடிவையும் எடுக்காமல், அதிமுகவையும் மீட்காமல் இருந்ததால் அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தனர். பிறகு 2 சதவீதம்தான் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினர். கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணத்தை ஆராயக் கோரி பொதுக் குழுவை கூட்டுமாறு சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் கோரி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், தவெக அரசு கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை பறித்தார். பின்னர் வேலுமணி தரப்பினர் பலர் எடப்பாடி அணிக்கே சென்றனர். அவர்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.


















