இந்தியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை

டெல்லி, ஜூலை 30- ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ள. பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.