இந்​தியாவில் வணிக ரீதியி​லான விமானங்​களின் எண்ணிக்கை 2,250-ஆக உயரும்

ஹைத​ரா​பாத்: ஜனவரி 30-
ஹைத​ரா​பாத் இந்​தி​யா​வின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டு வரு​கிறது. இந்​நிலை​யில், அடுத்த பத்து ஆண்​டு​களில் நாட்​டின் வணிக ரீதியி​லான விமானங்களின் எண்​ணிக்கை 2,250-ஆக உயரும் என ஏர்பஸ் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.
ைத​ரா​பா​தில் நடை​பெற்று வரும் ‘விங்ஸ் இந்​தியா 2026’ சர்​வதேச விமானக் கண்​காட்​சி​யில் பங்​கேற்ற ஏர்​பஸ் இந்தி​யா​வின் தெற்​காசி​யப் பிரி​வின் தலை​வர் ஜூர்​கன் வெஸ்​டர்​மேயர் கூறிய​தாவது:இந்​தியா தற்​போது 850 விமானங்​களைக் கொண்​டுள்​ளது. இது வரும் 2035-ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதி​கரித்து 2,250-ஆக உயரும். இதன் மூலம் உலகின் மூன்​றாவது மிகப் பெரிய சிவில் விமானப் போக்​கு​வரத்​துச் சந்​தை​யாக இந்​தியா உரு​வெடுக்​கும். தற்​போது இந்​திய விமான நிறு​வனங்​கள் 1,700-க்​கும் மேற்பட்ட விமானங்​களுக்கு ஆர்​டர் அளித்​துள்​ளன. இதில் 72 சதவீதம் ஏர்​பஸ் நிறு​வனத்தை சார்ந்​தவை. இந்​தி​யா​வுக்​காக ஆண்​டுக்கு சராசரி​யாக 120 முதல் 150 விமானங்​களை வழங்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம். அதாவது வாரத்​துக்கு 2 விமானங்​கள் என்ற வீதம் விநி​யோகம் செய்​யப்​படும்.முழுக்க முழுக்க இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்​டு, பாகங்​கள் இணைக்​கப்​பட்ட முதல் ‘சி-295’ ரக ராணுவப் போக்​கு​வரத்து விமானம், 2026-ம் ஆண்​டின் மூன்​றாவது காலாண்​டில் இந்​தி​யப் பாது​காப்​புப் படை​யிடம் ஒப்​படைக்​கப்​படும். மேலும், எச்​-125 ரக ஹெலி​காப்​டர்​களைத் தயாரிக்​கும் பணி​களும் முழு​வீச்​சில் நடை​பெற்று வருகின்றன. இவை அடுத்த ஆண்டு விநி​யோகிக்​கப்​படும்​. இவ்வாறு அவர் தெரிவித்தார்.