
வாஷிங்டன், ஜூலை 16 – அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கடந்த சில வாரங்களாகவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே இந்தியா உடனான ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
மேலும், வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியா மீதான இறக்குமதி வரி என்னவாக இருக்கும் என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் இறக்குமதி வரியைத் தவிர்க்க அமெரிக்கா உடன் இப்போது உலகின் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளனர். இந்தியா கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாகத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே இந்தியா உடனான ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது இந்தியச் சந்தைகளுக்கு ஈஸியான அணுகலை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.