இந்தியா கூட்டணி அமளி

புதுடெல்லி: ஜூலை 24 –
பாராளுமன்றம் இன்றும் முடங்கியது இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கினர் ஆனால் சபாநாயகர் இதற்கு மறுப்பு தெரிவித்தார் இதனால் கடும் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இவர்களுக்கு பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்தனர் இதனால் பாராளுமன்றத்தில் புயல் வீசியது யார் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கவில்லை பரபரப்பு நிலவியது.
குழப்பமான நிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
பீகாரில் வாக்காளர் பட்டியல் கடுமையான திருத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி உறுப்பினர்கள் இறுக்கமான விவாதத்தை நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால், இரு அவைகளிலும் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது, மேலும் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த நான்கு நாட்களாக தங்கள் நிலைப்பாட்டைத் தொடர்ந்தனர், மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு விவாதத்திற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவைக்கு இடையூறு விளைவித்தனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சபை நடவடிக்கைகளை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர சபாநாயகர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, சபை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று (ஜூலை 24), நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மகர் துவார் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ‘ஜனநாயத்தின் மீதான தாக்குதல்’ என்ற பேனரை பிடித்தபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி ஆ ராசா, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரகுமான் பார்க், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட ஏராளமான எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா, “ஒட்டுமொத்த எதிர்க்கட்சிளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இந்த போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மையை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளும் வரை போராட்டம் நடத்துவோம். வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் மக்களிடம் இருந்து பறிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.