
பெய்ஜிங்: நவம்பர் 24-
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்திருந்தது. இதற்கிடையே அந்த மோதலை சீனாவும் பயன்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவின் ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில், அது எப்படிச் செயல்படுகிறது என்பதைச் சீனா சோதித்ததாக அமெரிக்கக் குழு தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது சில நாட்கள் வரை இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்திக் கொண்டன. ஒரு கட்டத்தில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்திருந்தது. இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக அமெரிக்கக் குழு முக்கிய ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ரிப்போர்ட் அதாவது சீனாவின் ஆயுதங்கள் பல பாகிஸ்தானிடம் இருந்தது. ரியல் லைமில் தனது ஆயுதங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சோதிக்கவும் அதை மேம்படுத்தவும் சீனா இந்த மோதலை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமெரிக்க- சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பெய்ஜிங் இந்த மோதலை, தனது ஆயுதங்களின் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தப் பயன்படுத்தியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாதுகாப்புத் துறையில் சீனா பல்வேறு ஆயுதங்களை உருவாக்கி வரும் நிலையில், இது பெரியளவில் பயன் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பிளான் அந்த ரிப்போர்ட்டில் மேலும், “HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள் மற்றும் J-10 போர் விமானங்கள் போன்ற சீனாவின் நவீன ஆயுத அமைப்புகள் மோதல் ஒன்றில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. எனவே, அவை எப்படிச் செயல்பட்டன என்பதைச் சீனா அறிந்து கொண்டது.
இது சீனாவுக்குக் கிட்டத்தட்ட ஒரு நிஜ உலக சோதனையாகவே இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலுக்குப் பிறகு ஜூன் மாதம், பாகிஸ்தானுக்குச் சீனா தனது அதிநவீன 40 J-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், KJ-500 விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை விற்க முன்வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோதலுக்குப் பிறகுத் தனது ஆயுத விற்பனையை அதிகரிக்க இந்தியா பாகிஸ்தான் மோதலில் தனது ஆயுதங்களின் செயல்பாடுகளையே சீனா ரிப்போர்ட்டாக காட்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாமி போர் இல்லை சிலர் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர் என்பது உண்மையில் பினாமி போர் என்றும் சீனாவே பாகிஸ்தானைப் பினாமியாகப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு வந்தனர்.
அதை மறுத்துள்ள அமெரிக்கா, இதை மினாமி போர் என குறிப்பிட முடியாது என்றும் சீனாவின் பங்கு அந்தளவுக்கு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ரஃபேல் ஜெட் விமானங்கள் குறித்து பொய்யான தகவல்களைச் சீனா பரப்ப தொடங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போலி சமூக வலைத்தள கணக்குள் மூலம் ரபேல் போர் விமானங்களால் இந்த மோதலை சமாளிக்க முடியவில்லை எனச் சீனா பொய்யான தகவல்களை பரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை வைத்தே இந்தோனேசியா ரபேல் விமானங்கள் வாங்குவதைச் சீனாவால் தற்காலிகமாக நிறுத்த முடிந்ததாகவும் அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















