
நியூயார்க், ஆகஸ்ட்.6-
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்து உள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கோபமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே செய்துள்ளார், இன்று இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்துள்ளார், இதனால் இந்தியா மீதான அமெரிக்க வர்த்தக வரி 50 சதவிகிதம் ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியா மீதான வரியை கணிசமாக அதிகரிப்பதாக மிரட்டியிருந்தார். இறுதியாக, டிரம்ப் சொன்னது போலவே செய்துள்ளார், இன்று இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்துள்ளார்,
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார், இது ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும். இந்தியா அனைத்திலும் மிக உயர்ந்த வரி விதிப்பைக் கொண்டுள்ளது. நாங்கள் 25 சதவிகிதம் வரியை முடிவு செய்திருந்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில், நான் இந்தியா மீதான வரியை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். ஏனென்றால் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக டிரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஜூலை 30 அன்று, ஆகஸ்ட் 1 முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், கூடுதலாக குறிப்பிடப்படாத அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் இந்தியாவை எச்சரித்திருந்தார். அதன்படி, இன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகித வர்த்தக வரியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.