இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி

லண்டன், ஆகஸ்ட் 2- இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 8 விக்​கெட்​களை இழந்து 242 ரன்​கள் எடுத்து முன்​னிலை பெற்​றது. லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி மழை​யால் பாதிக்​கப்​பட்ட முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 64 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 204 ரன்​கள் எடுத்​தது. கருண் நாயர் 52, வாஷிங்​டன் சுந்​தர் 19 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​திய அணி மேற்​கொண்டு 20 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் எஞ்​சிய 4 விக்​கெட்​களை​யும் தாரை வார்த்​தது. கருண் நாயர் 109 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்​கின் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார். வாஷிங்​டன் சுந்​தர் 55 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை லெக் திசை​யில் தூக்கி அடித்த போது டீப் ஸ்கொயர் திசை​யில் ஜேமி ஓவர்​டனிடம் கேட்ச் ஆனது. இவர்​களை தொடர்ந்து முகமது சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 ரன்​களில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் நடையை கட்ட இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 69.4 ஓவர்​களில் 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தில் 34 பந்​துகளை மட்​டுமே எதிர்​கொண்ட நிலை​யில் கடைசி 4 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. இங்​கிலாந்து அணி தரப்​பில் கஸ் அட்​கின்​சன் 5, ஜோஷ் டங்க் 3 விக்​கெட்​களை​யும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர். இதையடுத்து பேட்​டிங்கை தொடங்​கிய இங்​கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட் ஜோடி பாஸ்​பால் முறை​யில் அதிரடி தொடக்​கம் கொடுத்​தனர். ஆகாஷ் தீப் வீசிய 4-வது ஓவரில் பென் டக்​கெட் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்​டில் சிக்​ஸர் விளாசி மிரட்​டி​னார். தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய 6-வது ஓவரில் பென் டக்​கெட் 3 பவுண்​டரி​கள் அடித்​தார். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ரேம்ப் ஷாட்​டில் விக்​கெட் கீப்​பரின் பின்​புறம் சிக்​ஸர் விளாசி​னார்.