
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம் என்று நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பட்டாபிராமன் வெங்கடேசன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் வசித்து வருகிறார். அவரும் அவரது மனைவி அஞ்சனா ராஜாவும் ஆன்மிக பயணமாக சீனாவின் திபெத்துக்கு சென்றனர். கடந்த 26-ம் தேதி இருவரும் நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெருவெள்ளம் சீறிப் பாய்ந்து வந்தது. இதை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் கீழே குதித்து தப்பியோடி விட்டார். பட்டாபிராமன் வெங்கடேசனும் அவரது மனைவி அஞ்சனா ராஜாவும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி மலையில் ஏறி உயிர் தப்பினர்.













