இந்திய பொருளாதார வளர்ச்சி

புதுடெல்லி: ஜூலை 2-
உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.
அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், சீனா உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதி​கரிக்க அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன.
ஆனால் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது. கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு சர்​வ​தேச பொருளா​தா​ரம் முழு​மை​யாக மீட்சி அடைய​வில்​லை.
பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்​வேறு நாடு​கள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரி​களை விதித்​துள்​ளது. இதன்​காரண​மாக கடந்த ஏப்​ரலில் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்​தித்​தது. இது உலகம் முழு​வதும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தி​யது. நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வின் பொருளா​தார வளர்ச்சி 1.5 சதவீத​மாக இருக்​கும்