இந்​தி​ய போர் விமான இன்ஜின்​ தயாரிக்​கிறது ரோல்ஸ்-ராய்ஸ்

புதுடெல்லி: பிப்ரவரி 13-
இந்​தி​யா​வில் தனது வர்த்​தகத்தை ரோல்ஸ் – ராய்ஸ் நிறு​வனம் விரிவுபடுத்த உள்​ளது. அதன் ஒரு பகுதியாக, போர் விமானங்​களுக்​கான இன்ஜின்​களை அந்த நிறு​வனம் தயாரிக்க முடிவு செய்​துள்​ளது.ரோல்​ஸ்​-​ராய்ஸ் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதிகாரி துஃ​பான் எர்​கின்​பில்​கிக், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார். இதனைத் தொடர்ந்து நேற்று அந்த நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: இந்​தி​யா​வின் நிலம், வான்​வெளி, கடல்சார் பாது​காப்​புத் துறை​களில் ரோல்​ஸ்​-​ராய்ஸ் தனது வர்த்​தகத்தை விரிவுபடுத்த பிரம்​மாண்ட திட்​டத்தை செயல்​படுத்த உள்​ளது.
குறிப்​பாக, இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறைப் போர் விமானங்​களுக்​கான இன்​ஜின்​களை உள்​நாட்​டிலேயே கூட்​டாக சேர்ந்து தயாரிக்க நிறு​வனம் முடிவு செய்​துள்ளது. இதன் மூலம் தற்​போதுள்ள பணி​யாளர்​கள் எண்​ணிக்கை இரண்டு மடங்​குக்​கும் மேல் அதி​கரித்து 10,000-ஆக அதிகரிக்​கப்பட உள்​ளது.மேலும், இந்​திய விநியோகச் சங்​கிலி மூலம் மேற்கொள்ளப்​படும் கொள்​முதலை 10 மடங்கு அதிகரிக்கவும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதில், சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​களுக்கு அதிக வர்த்தக வாய்ப்​பு​கள் வழங்​கப்பட உள்​ளன.பிரிட்​ட​னுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யாவை தனது மூன்றாவது பெரிய சந்​தை​யாக மாற்ற ரோல்​ஸ்​-​ராய்​ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.