இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, ஜூலை 26- மதங்​களுக்கு இடையி​லான பதற்​றத்தை தணிப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்​எஸ்​எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்​லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபல், சிறு​பான்மை பிரிவு தலை​வர் இந்​திரேஷ் குமார், இணை செய​லா​ளர்​கள் கிருஷ்ண கோபால் மற்​றும் ராம்​லால் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றனர்.முஸ்​லிம்​கள் தரப்​பில் அகில இந்​திய இமாம்​கள் சங்க தலை​வர் உமர் அகமது இலி​யாஸி ஏற்​பாடு செய்​திருந்​தார். இந்த கூட்டத்தில் முஸ்​லிம் வக்பு மசோதா குறித்த விவாதம் நடை​பெற்​றது. மேலும் மதத்​தின் பெயரில் வாக்கு வங்கி அரசி​யல், கும்​பல் படு​கொலை, மதக் கலவரங்​களுக்கு வித்​திடும் தவறான செய்​தி​கள் உட்பட பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்​தும்​வி​வா​திக்​கப்​பட்​டன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இலி​யாஸி கூறும்​போது, ‘‘எங்​கள் இமாம்​கள் அமைப்​பும் 50 ஆண்டு பொன் விழா கொண்​டாடு​வ​தால் இந்த கூட்​டத்​துக்கு ஒத்​துழைப்பு அளித்​துள்​ளோம்.
இந்து – முஸ்​லிம்​கள் இடையே ஒற்​றுமை நீடித்​தால் மட்​டுமே நம் நாடு வளர்ச்​சிப் பாதை​யில் முன்​னேறும். இதற்​காக இரு மதத்​தவர்​கள் இடையே ஒற்​றுமையை வளர்க்​கும் பேச்​சு​வார்த்​தைக்கு பால​மாக ஆர்​எஸ்​எஸ் செயல்பட விரும்புகிறது. அதன்​படி, பேச்​சு​வார்த்​தை​தான் அனைத்து பிரச்​சினை​களை​யும் தீர்க்​கும் என்​பது முதல் கூட்​டத்​தின் வழி​யாக புரிந்​துள்​ளது’’ என்​றார். ஆர்​எஸ்​எஸ் தேசிய செய்தி தொடர்​பாளர் சுனில் அம்​பேத்​கர் கூறும்​போது, ‘‘இந்த கூட்​டம் தொடர்ந்து நடை​பெறும். நாட்​டின் முன்னேற்​றத்​துக்​காக இரு தரப்​பினரும் ஒற்​றுமை​யுடன் செயல்​படு​வது என்​பதே இதன் நோக்​கம். முதல் கூட்​டம் சிறந்த பலனை அளித்​துள்​ளது’’ என்​றார். இதற்​கிடை​யில், இந்​திய முஸ்​லிம்​களை பாஜக.வுடன் சேர்ப்​ப​தற்​கு​தான் இந்த கூட்​டம் நடத்​தப்​படு​கிறது’’ என்று உ.பி. காங்​கிரஸ் முஸ்​லிம் எம்​.பி. இம்​ரான் மசூத் விமர்​சித்​துள்​ளார்.