
பெங்களூரு: ஜூலை 5 –
பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிலில் இன்று அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த டெலிவரி பாய் பலியானார்.கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பின்னால் மோதியதில் இந்த சம்பவம் நடந்தது.
நீலசந்திராவைச் சேர்ந்த முகமது அசார் (25) என்பவர், அதிகாலை 4 மணியளவில் மைசூர் வங்கி சர்க்க சர்க்கிலில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போ அப்போது திருப்பதி-பெங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பஸ் பின்னால் மோதியதில் உயிரிழந்தார்.
விபத்தின் போது கீழே விழுந்த ஓட்டுநர் முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர அவரது உடல் விக்டோரியா மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும் உப்பார்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதேபோல்
ஹோஸ்கோட் சாலையில் உள்ள டின் தொழிற்சாலை அருகே நடந்த விபத்தில், பின்னால் இருந்து வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேனகா (61) என்பவர் உயிரிழந்தார், அதே நேரத்தில் ஒரு ஒருவர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகாதேவபுரா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்