Home மாவட்டங்கள் பெங்களூர் இரு வேறு விபத்து இருவர் சாவு

இரு வேறு விபத்து இருவர் சாவு

பெங்களூரு: ஜூன் 11–
சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய தனித்தனி விபத்துகளில், ஸ்கூட்டரில் சென்றவர் மற்றும் ஒரு பாதசாரி என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹோசகோட்டையைச் சேர்ந்தவர் ஜமீர் பாஷா (வயது 46). இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காய்கறி வாங்குவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சிந்தாமணி – கரப்பனஹள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பொலிரோ சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் கோரத்தாண்டவத்தில், பலத்த காயமடைந்த ஜமீர் பாஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ஹோசகோட்டே போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெலமங்களா போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட சொள்ளேகொப்ப சர்க்கிள் அருகே, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நெலமங்களா தாலுகாவைச் சேர்ந்த சன்னேகவுடா (வயது 68) என்ற பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நெலமங்களா போக்குவரத்து போலீசார், பைக் ஓட்டி வந்தவரை அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.