Home மாவட்டங்கள் பெங்களூர் இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்

இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்

சென்னை: மே 29-
இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார்.
மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும் கொன்​ராட் அதெ​னாவர் அறக்​கட்​டளை சார்​பில் வங்​கி​யாள​ரும், பிரபல எழுத்​தாள​ரு​மான ஷியாம் னி​வாசன் எழு​திய ‘பெட்​டர் நெவர் ஸ்டாப்​ஸ்’ புத்தக வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ், புத்​தகத்தை வெளி​யிட்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தலை​முறை​யினரிடையே வாசிப்பு பழக்​கம் குறைந்து வரு​கிறது.
இளைஞர்​கள் எப்​போதும் செல்​போனையே பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர். அதைத் தவிர்த்​து, புத்​தகங்​களை வாசிக்​கத் தொடங்க வேண்​டும். மக்​கள் படிக்​கா​விட்​டால் புத்​தகம் எழுது​வ​தில் என்ன பயன்? எனவே, அனை​வரும் தின​மும் குறைந்​தது இரண்டு பக்​கங்​களாவது படிக்​கப் பழக வேண்​டும்.
எனக்கு கற்​றல் குறை​பா​டான ‘டிஸ்​லெக்​ஸி​யா’ இருந்​த​தால், எண்​களை மாற்​றிப் புரிந்​து​கொள்​ளும் பழக்​கம் இருந்​தது. அதனால் வகுப்​பறைக்கு செல்​லவே பயந்​தேன்.
அக்​காலத்​தில் ஆசிரியர்​கள் கண்​டிப்​புடன் இருந்​த​தால், தண்​டனை​களில் இருந்து தப்​பிக்​கவே வகுப்பை விட்டு ஓடி கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்​கினேன். ஆரம்​பத்​தில் எனது மகிழ்ச்​சிக்​காக விளை​யாடினேன். பின்​னர் அது நாட்​டுக்​கான விளை​யாட்​டாக மாறியது.