Home செய்திகள் உலக செய்திகள் ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஜூன் 24-
அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பயங்கர மோதல் நடந்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க, சுவிட்சர்லாந்து நாட்டில் இரு நாடுகளும் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இரானில் உள்ள அணுசக்தி மையங்களை சர்வதேச அதிகாரிகள் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்றும், அப்படி அனுமதிக்க மறுத்தால் அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் அதிரடியாக முழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளும் பேசி வரும் வேளையில், டிரம்பின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அணுசக்தி மையங்களை சோதனையிட இரான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. ஒருவேளை அவர்கள் அனுமதி மறுத்தால், தற்போதைய பேச்சுவார்த்தையை நான் இப்போதே ரத்து செய்திருப்பேன். இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம்” என்று கூறினார். மேலும், இரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஹோமுஸ் ஜலசந்தி பகுதியில் 19 பேரல் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரானின் ராணுவ பலம் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த பிப்ரவரி மாதம் முதல் இசுரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரான் மீது தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் உருவானது. இதனால் உலகிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழியான ஹோமுஸ் ஜலசந்தி மூடப்பட்டது. தற்போது பேச்சுவார்த்தைக்குப் பின் நிலைமை சீராகி வந்த நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட ஒப்பந்தம் நடந்தாலும், இரு நாடுகளின் மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. அமெரிக்கா – இரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் பயங்கர மோதல் நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாகசுவிட்சர்லாந்து நாட்டில் முக்கிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் அணுசக்தி சோதனையை தடுத்தால் பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.டொனால்ட் டிரம்பின் அதிரடி பேச்சால் மீண்டும் புதிய சர்ச்சை வடித்துள்ளது இரானின் ராணுவ பலத்தை குறைக்க அமெரிக்கா தீவிர முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.