
பெங்களூரு: ஆக. 13- கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை, அவரது சதாசிவ நகர் இல்லத்தில் கன்னட மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து
கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
கர்நாடக ரக்ஷண வேதிகே மாநில தலைவர் எச்.சிவராமேகௌடா, அகில கர்நாடக டாக்டர் ராஜ்குமார் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சா.ரா.கோவிந்து, கன்னட உரிமை போராட்டக்காரர் பாலநேத்ரா, சி.கே.ராமேகௌடா, விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், கர்நாடக ரக்ஷண வேதிகே இளைஞரணி தலைவர் கன்னட குமார், பெங்களூரு மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் சமரசேனை தலைவர் ஜெகதீஷ் கௌடா ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
அப்போது, காவேரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் நிலுவையில் உள்ள அனைத்து பாசன திட்டங்களையும் உடனே தொடங்கி செயல்படுத்த வேண்டும் என்றும் கன்னட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் இது குறித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார். இதற்கிடையே
காவிரி நீர் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கோரி வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்து இருந்தார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டதை எதிர்த்தோம் மேகத்தாட் அணையை கட்ட வலியுறுத்தியும் இந்த பந்த் போராட்டம் நடந்தது. பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். டவுன் ஹால், கே.ஆர். மார்க்கெட், மைசூர் வங்கி வட்டம், மெஜஸ்டிக் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். டவுன் ஹாலில் நான்கு கே.எஸ்.ஆர்.பி. குழுக்கள் நிறுத்தப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பந்திற்கு அழைப்பு விடுத்திருந்த அமைப்புகளுக்கு, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பந்த் அல்லது போராட்டம் நடத்த வேண்டாம் என்று காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஒருவேளை போராட்டம் நடத்தப்பட்டால், அது ஃபிரீடம் பார்க்கில் மட்டுமே நடத்தப்படும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டாலோ, போக்குவரத்து தடைபட்டாலோ அல்லது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலையில் வாட்டாள் நாகராஜ் உட்பட பல கன்னட ஆதரவு ஆர்வலர்களை காவல்துறை கைது செய்தது. டவுன் ஹாலில் போராட்டம் நடத்தச் சென்ற ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஃபிரீடம் பார்க் அருகே விடுவிக்கப்பட்டனர். வாதல் நாகராஜ் சி.ஆர்.பி. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பின்னர் பேசிய வாட்டாள் நாகராஜ், பந்த் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காக அரசு காவல்துறையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதிக்காதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டிற்குச் செல்லும் பேருந்துகளின் இயக்கத்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சாந்திநகரிலிருந்து தமிழ்நாட்டிற்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. நிலைமை மோசமடைந்தால் எல்லை வரை பாதுகாப்பு வழங்குவதற்காக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நம்ம மெட்ரோ சேவை காலை 5 மணிக்குத் தொடங்கியது, போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. பயணிகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தாலும், மெட்ரோ சேவை சாதாரணமாக இருந்தது.
மொத்தத்தில், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைகள் மற்றும் கன்னட-கர்நாடகாவின் நலன்களைக் கருத்தில் கொண்டு அழைக்கப்பட்ட கர்நாடக பந்த், பெங்களூருவில் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது. பந்தைக் காட்டிலும் போராட்டங்களும் காவல்துறை கைதுகளுமே அதிக கவனத்தை ஈர்த்தன. நகரில் கடைகளும், தள்ளுவண்டிகளும் திறந்திருந்தன. பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியதால், தலைநகரில் இயல்பு நிலை திரும்பியது.
காவேரி நீரைத் திறந்துவிட வேண்டும் என காவேரி நீர் மேலாண்மைக் குழு பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து இன்று அழைக்கப்பட்டிருந்த கர்நாடக பந்தை, கன்னட ஆதரவு அமைப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.
பெங்களூரில் முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்த கன்னட ஆதரவு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துரையாடினர். அப்போது, கர்நாடக பந்தை வாபஸ் பெற வேண்டும் என முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கோரிக்கை விடுத்தார். எனவே, முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க, கர்நாடக பந்தை வாபஸ் பெறுவதாக கன்னட ஆதரவு அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “ரக்ஷண வேதிகையின் தலைவர்கள் வந்து என்னைச் சந்தித்தனர். அவர்கள் கர்நாடக பந்தை வாபஸ் பெற்றுள்ளனர். அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் பந்த் வாபஸ் பெறப்பட்டதாக தலைவர் சாரா கோவிந்து கூறினார்.
















