மாஸ்கோ, ஜூலை 14- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்து வரும் பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவதை போல தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கு சமரசம் பேச நடுவில் ஒரு ஆள் தேவை. ரஷ்யா இந்த வேலையை செய்யும் என்று அமெரிக்க ஊடகமான Axois தெரிவித்திருக்கிறது. அப்படியெனில், பிரச்சனை வெடிக்குமா? அல்லது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஈரான் அணு சக்தியை பயன்படுத்தும் நாடு. இந்த அணு சக்தியை ஈரானுக்கு கொடுத்ததில் வட கொரியா மற்றும் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்போது வரை அணு சக்தியை ஈரான் அமைதி நோக்கங்களுக்காகத்தான் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் கவலை இதை சர்வதேச மீடியாக்களும், அமெரிக்க மீடியாக்களும், ஐநா அணு சக்தி அமைப்பும் கூட ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னைக்கு அமைதியாக இருக்கும் ஈரான், நாளை அணு சக்தியை பயன்படுத்தி அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்? என்ன செய்வது என்பது அமெரிக்காவின் கவலை. பல ஆயிரம் கி.மீக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவுக்கு எதுக்கு இந்த கவலை என்று கேள்வி எழலாம். உண்மையில் கவலை அணு ஆயுதத்தை பற்றி இல்லை. மத்திய கிழக்கில் அணு சக்தியை மிகவும் பயன் உள்ளதாக பயன்படுத்தும் நாடுகளில் ஈரான் முன்னிலையில் இருக்கிறது. அணு சக்தி சாபமிட்ட புதையல் மாதிரி. அது ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அணு சக்தியா? ஆயுதமா? ஈரான் இதை ஆக்கத்திற்காக பயன்படுத்துவது நீடித்தால், மத்திய கிழக்கில் மிகவும் செல்வாக்கு மிக்க நாடாக அது மாறிவிடும். இத்தனைக்கும் அமெரிக்காவை ஈரான் கடுமையாக விமர்சித்து வருகிறது. அப்படி இருக்கையில், எப்படி அந்நாட்டை வளர விட முடியும்? இதுதான் அமெரிக்காவின் உண்மையான கவலை. எனவே அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று இஸ்ரேல் சொல்ல.. அமெரிக்கா அதை கெட்டியாக பிடித்துக்கொண்டது. ஈரானுடன் மோதல் இந்த தியரியின் அடிப்படையில் முதலில் ஈரான் மீது இஸ்ரேலும், பின்னர் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் முழு வெற்றியும் கிடைக்கவில்லை. ஆனால், அடி வாங்கிய ஈரான் சும்மா இருக்குமா? நிச்சயம் எப்படியாவது பதிலடி கொடுக்கும். எனவே ஈரானை சமாதானப்படுத்த அமெரிக்காவுக்கு ஒரு ஆள் தேவை. அது நிச்சயம் ரஷ்யாவாகத்தான் இருக்கும் என்பதும் தெரியும்.



















