ஈரான் பக்கத்தில் சென்ற அமெரிக்காவின் போர்க்கப்பல்

வாஷிங்டன்: ஜனவரி 27-
ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது, போராடும் மக்களை ஒடுக்கினால்.. உதவிக்கு அமெரிக்கா வரும் என்றும் கூறியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலைக்கார ராட்சத கப்பல் ஒன்று, தனது சிக்னலை ஆஃப் செய்துவிட்டு சைலன்டாக ஈரான் பக்கத்தில் நகர்ந்திருக்கிறது. இனி அடுத்து என்ன ஆகுமோ என்கிற அச்சம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியிருக்கிறது. யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் எனும் போர்க்கப்பல்தான் தற்போது ஈரானுக்கு அருகில் நகர்ந்திருக்கிறது. இந்த கப்பலுடன் மேலும் சில சிறிய போர்க்கப்பல்களும் ஈரான் அருகே சென்றிருக்கின்றன.
அச்சுறுத்தும் கப்பல் இந்த கப்பலை ஒரே குண்டில் மூழ்கடிக்க முடியும் எனில், அது அணு ஆயுதத்தால் மட்டுமே முடியும். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து, இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இதே கப்பல் ஈரான் அருகே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் இன்று நடப்பது புதிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், இதற்கு முன்னர் இந்த கப்பல் பயணிக்கும் பாதைகள் உலக நாடுகளுக்கு வெளிப்படையாக தெரிந்தது. இந்திய பெருங்கடலில் பயணம் இக்கப்பல் தனது சிக்னலை ஆன் செய்து வைத்து பயணித்து வந்தது. ஆனால், தற்போது முதன் முறையாக, சிக்னலை ஆஃப் செய்துவிட்டு இக்கப்பல் இந்திய பெருங்கடலில பயணித்திருக்கிறது. எனவே கப்பல் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. இந்த ஒரு கப்பலை தனியாக சமாளிப்பதே ரொம்பவும் கஷ்டமான வேலை.