உங்களுடன் ஸ்டாலின்திட்டம் தொடக்கம்

கடலூர்: ஜூலை 15 –
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர், மக்களிடம் மனுக்களை பெற்றார்.
”உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில், இன்று முதல்வர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மக்களிடம் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
உங்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். இன்று துவங்கி நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன.
நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இன்று துவங்கி ஆகஸ்ட் 15 வரை, முதற்கட்டமாக 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 1,428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்களும் நடக்க உள்ளன.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் முகாம் நடைபெற உள்ள இடத்தின் விவரங்களை அறிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.