Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பிக்கள் ஷிண்டே கட்சியில் இணைந்தனர்

உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பிக்கள் ஷிண்டே கட்சியில் இணைந்தனர்

மும்பை, ஜூன் 23- உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னாவை சேர்ந்த 6 எம்​பிக்​கள், ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா​வில் நேற்று இணைந்​தனர்.கடந்த 2024ம் ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலில் காங்கிரஸ் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்த உத்​தவ் தாக்​கரே​யின் சிவசேனா 9 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்த ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா 7 தொகுதி​களைக் கைப்​பற்​றியது. இந்த சூழலில் கடந்த 18ம் தேதி மும்​பை​யில் உத்​தவ் அணி சிவசேனா எம்​பிக்​கள் கூட்​டம் நடைபெற்​றது. இதில் 3 எம்​பிக்​கள் மட்​டுமே பங்​கேற்​றனர். 6 எம்.பிக்​கள் கூட்​டத்​தில் கலந்து கொள்​ள​வில்​லை. இந்த சூழலில் உத்​தவ் சிவசே​னாவை சேர்ந்த 6 எம்​பிக்​கள் மும்​பை​யில் நேற்று ஷிண்​டே​வின் சிவசே​னா​வில் இணைந்​தனர். இந்த நிகழ்ச்​சி​யில் மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே பேசும்போது, “சிவசே​னாவை காப்​பாற்ற கடந்த 2022ம் ஆண்​டில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​பட்​டது. தற்​போது சிவசே​னா​வின் கொள்​கைகளை காப்​பாற்ற புதி​தாக 6 எம்​பிக்​கள் எங்​கள் அணி​யில் இணைந்​துள்​ளனர். சிவசேனா நிறு​வனர் பால் தாக்​கரே​வின் கொள்​கை, கோட்​பாடு​களை நாங்​களே காப்​பாற்றி வரு​கிறோம். இதன் ​காரண​மாகவே எங்​கள் அணிக்கு ஆதரவு பெருகி வரு​கிறது” என்றார். ஷிண்டே சிவசே​னா​வில் ஏற்​கெனவே 7 எம்​பிக்​கள் உள்​ளனர். புதிதாக 6 எம்​பிக்​கள் இணைந்​திருப்​ப​தால் அந்த கட்​சி​யின் மக்களவை பலம் 13 ஆக அதி​கரித்​துள்​ளது. மூன்​றில் இரு பங்கு எம்​பிக்​கள் அணி மாறி​யிருப்​ப​தால் கட்சி தாவல் சட்​டத்​தின் கீழ் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க முடி​யாது. இது குறித்து முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே கூறும்போது, “சுமார் 30 ஆண்​டு​களாக காங்​கிரஸுக்கு எதி​ராக சிவசேனா போராடியது. ஆனால் சிவசே​னாவை, அந்த கட்சி உடைக்கவில்லை. பாஜக வளர்ச்சி அடைய சிவசேனா உறுதுணையாக இருந்​தது. ஆனால் எங்​கள் கட்​சியை பாஜக உடைத்து விட்​டது” என்றார்.