
சென்னை: ஜூன் 23-
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று சிங்கம் போல் கர்ஜனை செய்தார். விஜய் வாயை திறக்க வேண்டும் அவர் பேச வேண்டும் என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அவர் இன்று சட்டசபையில் பொங்கி எழுந்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போது திமுக உறுப்பினர்கள் அவரை பேச விடாமல் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்களை அமரும்படி சபாநாயகர் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். முன்னதாக முதலமைச்சர் விஜய் பேசும் போது என் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழக வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாக தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்த போது ஒரு பத்திரிகையில் இனி லஞ்சம் ஊழல் ஒழிக்கப்படும் என்றும் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடலை குறிப்பிட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதையே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எனது பதிலாகத் தருகிறேன் என்றார். தொடர்ந்து முதலமைச்சர் பேசும் போது திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பிய படி இருந்தனர் சபாநாயகர் அவர்களை பலமுறை அமர சொல்லியும் கேட்கவில்லை. அப்போது முதலமைச்சர் விஜய் எழுந்து ஆவேசமாக பேசினார். கடந்த ஆட்சியில் நடந்த அலங்கோலங்களை லஞ்சம் ஊழல்களை பட்டியல் போட்டால் அவர்களுக்கு கோபம் வருகிறது. அவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை லஞ்சம் ஊழல் செய்தவர்கள் இப்போது நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பணத்தை தொட மாட்டோம் இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டோம். இப்போது புதிதாக ஒரு கருத்தை கூறி வருகின்றனர் அதாவது எங்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள் உங்கள் தயவால் அல்ல மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள கட்சிகள் இந்த ஆட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளன ஆனால் அவர்களை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களை யாரும் அனுப்பவில்லை நாங்களாகவே சுயேசையாக முடிவெடுத்து வந்திருக்கிறோம் என்று தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்கள். நீங்கள் தான் அனுப்பி வைத்தீர்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது உங்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது. என்று காட்டமாக விஜய் கூறினார் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கு அவையில் பெரும் ஆர்ப்பரிப்பு கைத்தட்டல் கிளம்பியது. இவ்வளவு நாள் அமைதியாக சட்டசபையில் அமர்ந்திருந்த விஜய் இன்று பேசும் காட்சிகளை பார்க்கும்போது ஒரு விறுவிறுப்பான சினிமாக்களை காட்சியை பார்ப்பது போல் இருந்தது. முதல்வர் விஜய் பேசப்பேச எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். “ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நின்றாலும், எதெற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் அல்ல. நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நாம் யாருடைய ‘பி’ டீமும் அல்ல, நாம் எப்போதும் தூய்மையான மக்களின் அணி.” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “நான் ஏதோ படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து முதல்வர் ஆனது போல எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. 1990-கள் முதல் பல வழிகளில் மக்களுக்கு துணையாக நின்றேன். எனது படங்களில் முடிந்த அளவு ஊழல் ஒழிப்பு, சமூக நீதி, கல்வி, அரசியல் பற்றி சொன்னோம். அதற்காக எனது படங்கள் சந்தித்த பிரச்சினைகள் அதிகம். மக்கள் நம்மை தெளிவாக புரிந்துகொண்டதால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் சிங்கப்பெண் அதிரடிப் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், குறுவை சாகுபடி தொகுப்பு, போதைப்பொருள் ஒழிப்புப் படை, 717 மதுபானக் கடைகள் மூடல், அம்மா உணவகங்கள் புதுப்பிப்பு, பத்திரப்பதிவுத்துறை பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ளோம்.
தமிழ்நாட்டின் கருவூலம் தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது. இப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்துவிட்டு, நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்கிறார்கள். எங்களுக்கு மக்கள் பணி மட்டும் செய்யத் தெரியும், மக்கள் பணத்தை சுரண்டத் தெரியாது. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், மின் சாதனங்கள், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதாலும், வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளுமே இந்த மின் வெட்டுக்கு காரணமாக உள்ளது.
ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கொண்டவர்கள் தான் நாம். தற்போதைய ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நின்றாலும், எதெற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் அல்ல. நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம்.அதற்காக அரசியல் ரீதியான கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதில் மக்களுக்கும், சிறுபான்மை சகோதரர்களுக்கும், ஆதரவு இயக்கங்களுக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நாம் யாருடைய ‘பி’ டீமும் அல்ல, நாம் எப்போதும் தூய்மையான மக்களின் அணி. நீட் தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது தான் நம் நிலைப்பாடு. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அக்கறையோடு கேட்பதாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் செய்வது அவதூறு அரசியல்.” என்றார்.


















