Home செய்திகள் தேசிய செய்திகள் உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி

உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி

சிங்கூர், ஏப்ரல் 27- மேற்கு வங்கத்தில் அமோக விளைச்​சலால் உருளைக்​கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்​துள்​ளது. மேற்கு வங்​கத்​தின் சிங்​கூர் பகு​தி​யில் இந்த ஆண்டு உருளைக்​ கிழங்கு விளைச்​சல் அமோக​மாக உள்​ளது. அதே​நேரம் அதிக வரத்து காரண​மாக அதன் ஒரு விலை ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்​ளது. போதிய விலை கிடைக்​காத​தால் விவ​சா​யிகள் அவற்​றைச் சாலைகளில் கொட்டி வரு​கின்​றனர்.
இது குறித்து விவ​சாயி பிரதீப் தாஸ் கூறும்​போது, “உருளைக்​கிழங்கின் அதி​கப்​படி​யான உற்​பத்தி வரு​வாயைக் குறைத்துவிட்டது.
ஒரு பிகா நிலத்​தில் உருளைக் ​கிழங்கு பயி​ரிட சுமார் ரூ.20,000 செல​வாகிறது, ஆனால் எங்​களுக்கு ரூ.16,000 முதல் ரூ.18,000 வரை மட்​டுமே கிடைக்​கிறது” என்​றார்.அவரது கூற்​றுப்​படி, கையிருப்பு மிக அதி​க​மாக இருப்​ப​தால், குளிர்​ப​தனக் கிடங்​கு​களில் உள்ள உருளைக் ​கிழங்​கு​களைக் காலி செய்​யவே ஒன்​றரை ஆண்​டு​கள் ஆகலாம். எல்​லைகளில் வாகனங்​கள் நிறுத்​தப்​படு​வ​தால், உருளைக்​ கிழங்​கு​கள் வெளியே செல்ல முடி​யாமல் தேக்​கமடைந்து விலை சரிந்​துள்​ளது. இந்த ஆண்டு உருளைக்​கிழங்கு உற்​பத்தி சுமார் 1.4 கோடி டன்னாக உயர்ந்​துள்​ளது. இந்த உபரி வரத்து சேமிப்பு நிலையங்களுக்கு பெரும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
குளிர்ப​தனக் கிடங்​கு​கள் அனைத்​தும் முழு​மை​யாக நிரம்​பி​விட்டன என்​றும், புதிய மூட்​டைகளை வைக்க இடமில்லை என்​றும் விவ​சா​யிகள் கூறுகின்​றனர். விவ​சாயி ஜோஹர் தத்தா கூறும்​போது, “மற்ற மாநிலங்​களி​லும் உருளைக்​ கிழங்கு உற்​பத்தி அதி​க​மாக இருப்​ப​தால், வங்​காள உருளைக் ​கிழங்​குக்​கான தேவை குறைந்​து​விட்​டது. கிடங்​கு​களில் இடமில்​லாத​தால் வெளி​யில் வைக்​கப்​படும் உருளைக் ​கிழங்​கு​கள் அழுகி வீணாகின்​றன. இதனால் மாநிலம் முழு​வதும் உள்ள விவசா​யிகள் பெரும் நஷ்டத்​தைச்​ சந்​தித்​து வரு​கின்​றனர்​“ என்றார்​.