உஷாராக வந்த ஜெலன்ஸ்கி.. பாராட்டிய டிரம்ப்

வாஷிங்டன், ஆகஸ்ட் 19- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேசினர்.
இரு தலைவர்களும் கடந்த முறை பேசும்போது வாக்கு வாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. ஆனால், தற்போது சுமூகமான முறையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அணிந்து வந்து இருந்த உடையும் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கடந்த 15 ஆம் தேதி டிரம்ப் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனாலும் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் புதினை தொடர்ந்து இன்று வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.