Home செய்திகள் தேசிய செய்திகள் உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது

உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது

காந்திநகர்: ஆகஸ்ட் 26-
குஜராத் அருகே மும்பையில் இருந்து ஆமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சென்ட்ரல் – ஆமதாபாத் இடையே இந்தியாவின் 42வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொலைவை சுமார் 491 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. இந்த நிலையில், நேற்று மும்பையில் இருந்து ஆமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த ரயில், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள உத்ரான் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலில் உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ரயில் மீது கல்வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது.