
சென்னை: ஆகஸ்ட் 26-
மறைந்த திரைப் பட இயக்குநர் பாரதிராஜாவிற்கு தேனியில் மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்ற, த.வெ.க., அரசின் அறிவிப்புக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி த லைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார் சட்டபையில் நேற்று, பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ‘’தமிழ் திரையுலகை, கிராமிய சூழலுக்கு நகர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வியலை திரைப்படங்களாக உருவாக்கியவர் பாரதிராஜா.
‘’நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாரதிராஜாவிற்கு, தேனியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்,’’ என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்காக, முதல்வர் விஜய்க்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல் வெளியிட்ட அறிக்கையில், ‘மண் வாசனையை திரையில் பதிவு செய்த பாரதிராஜாவிற்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் த.வெ.க., அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
‘இது காலத்தினாற் செய்த நன்றி’ என கமல் குறிப்பிட்டுள்ளார்..












