எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – மக்களவையில் ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: ​ பிப்ரவரி 12-
நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடந்து வரும் நிலை​யில் நேற்று எதிர்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மக்களவையில் உரை​யாற்​றி​னார்.
அவை​யில் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: ”நாம் தீவிரமடைந்து வரும் புவி​சார் அரசி​யல் மோதல்​கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வரு​கிறோம். அமெரிக்​கா​வின் ஆதிக்​கத்​துக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்​தி​கள் சவால் விடு​கின்​றன.
போர் சகாப்​தம் முடிந்து​விட்​ட​தாக பிரதமர் மோடி​யும், பாது​காப்பு ஆலோ​சகரும் சில நாள்​களுக்கு முன் தெரி​வித்​தனர். ஆனால், நாம் போர் சகாப்தத்​துக்கு மத்​தி​யில்​தான் வாழ்ந்து கொண்​டிருக்​கிறோம்.
உக்​ரைன், காசா, மத்​திய கிழக்​கு​ நாடுகளில் போர்​கள் நடைபெற்று வரு​கின்​றன. ஈரானில் போர் அச்​சுறுத்​தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்​தூரை சந்​தித்​தோம். டாலருக்கும், அமெரிக்க மேலா​திக்​கத்​துக்​கும் சவால் விடப்படுகிறது.
அமெரிக்கா​வுக்​கும், சீனா​வுக்கும் இடையி​லான போட்​டி​யில், மிக​வும் மதிப்​புமிக்க ஒரு சொத்து இந்​திய தரவு​கள் என்​பதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன். அமெரிக்கா வல்​லர​சாக தொடர விரும்​பி​னால், டாலரைப் பாது​காக்க விரும்​பி​னால், அதற்கான வழி இந்​தி​யர்​கள் ​தான்.
மக்​கள் ​தொகை கூடு​வது சுமை என்​றும், பேரழிவு என்​றும் பலர் சொல்​கின்​றனர். ஆனால், மக்​கள் ​தொகை தான் நம்​மிடம் இருக்கக் கூடிய மிகப்​பெரிய சொத்​து. அது நமது பலம். அமெரிக்கா​வுடன் ஒப்பந்​தம் செய்து நீங்​கள் ​(மத்​திய அரசு) இந்தியாவை விற்றுவிட்டீர்​கள்.
இந்​தி​யாவை விற்​ற​தில் உங்களுக்கு வெட்​கமாக இல்​லை​யா? நீங்கள் எங்​கள் தாய் பாரத மாதாவை விற்று விட்​டீர்​கள். இதில் சுவாரஸ்​ய​மான விஷ​யம் என்னவென்​றால், பிரதமர் பலனில்லாமல் இந்​தி​யாவை விற்க மாட்​டார் என்​பது எனக்​குத் தெரி​யும். அவர் ஏன் இந்​தி​யாவை விற்றார் என்​பது
உங்​களுக்​குத் தெரி​யு​மா? ஏனென்​றால் அவர்​கள் அவரது கழுத்​தைப் பிடித்திருக்கின்​றனர்.
ஒன்று தொழில​திபர் அதானி மீதான அமெரிக்க வழக்​கு. மற்றொன்று இன்​னும் ரகசி​ய​மாக வைக்​கப்​பட்​டுள்ள ‘எப்​ஸ்​டீன் கோப்​பு​கள்’ தொடர்​பானது. எப்​ஸ்​டீன் தொடர்​பான 30 லட்​சம் கோப்​பு​கள் வெளி​யாகி உள்ளன. ஒரு வேளை இண்டியா கூட்​டணி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் பேச்​சு​வார்த்தை நடத்தியிருந்​தால், பின்​வரும் நிபந்​தனை​களை முன்வைத்திருப்போம்.
எங்​கள் மக்​களின் தரவு​களை நீங்​கள் (ட்ரம்ப்) பெற விரும்​பி​னால், எங்​களைச் சமமானவர்​களாகக் கரு​திப் பேசுங்​கள். எங்​களை உங்களது பணி​யாட்​களைப் போல நடத்​தாதீர்​கள்.
இந்​திய மக்களின் தரவு​களை அமெரிக்​கா​விடம் ஒப்​படைப்​ப​தன் மூலம் பிரதமர் மோடி இந்​தி​யா​வின்​ எதிர்​காலத்​தைச்​ சரணடையச்​ செய்துள்​ளார்​. இவ்​வாறு ராகுல் பேசி​னார்​.
இதுகுறித்து மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “அவை​யில் ராகுல் காந்தி பேசி​யது அனைத்​தும் பொய்.
அவரது பேச்​சில் என்​னென்ன பொய்​கள் உள்ளனவோ, அவற்றை நீக்​கக் கோரு​வோம். இது தொடர்​பாக ராகுல் காந்தி ஆதா​ரங்​களை அளிக்​கு​மாறு பேர​வைத் தலைவரிடம் நோட்​டீஸ் வழங்​கு​வோம்” என்​றார்​.