Home விளையாட்டு அமெரிக்காவை துவம்சம் செய்தது பெல்ஜியம்

அமெரிக்காவை துவம்சம் செய்தது பெல்ஜியம்

சி​யாட்​டில், ஜூலை 8- ​ பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்​டில் மைதானத்​தில் பெல்ஜியம் – அமெரிக்கா அணி​கள் மோதின. ஆட்டத்​தின் 9-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி முதல் கோலை அடித்​தது. பெல்ஜியம் அணி​யின் வீரர் லுகே​பாக்​கியோ வலது பக்கத்திலிருந்து இடது பக்​கத்​திற்கு கொடுத்த தொலை​தூர பாஸ் நேராக ட்ரோஸார்டை சென்​றடைந்​தது. இதன் பின்​னர் ட்ரோஸார்ட் அடித்த கிராஸை அமெரிக்க அணி​யின் வீரர் ஃப்​ரீமேன் தடுத்​தார். ஆனால் மற்​றொரு அமெரிக்க வீர​ரான ரிச்சர்ட்ஸ் அதை தலை​யால் முட்டி விலக்​கி​விடத் தவறி​னார். இந்​தத் தவறை சரி​யாக பயன்​படுத்​திய பெல்​ஜி​யம் அணி​யின் நிக்​கோலா ரஸ்​கின், துள்​ளிக் குதித்த பந்​தைக் கட்​டுப்​படுத்​தி, 18 அடி தூர பாக்​ஸிற்​குள் புகுந்​து, கோல் போஸ்ட்​டின் முகப்பை நோக்கி பந்தை தாழ்​வாக பாஸ் செய்​தார். அங்கே ஊடுருவி நுழைந்த சார்​லஸ் டி கெட்​டேலேரே எளி​தாக பந்தை கோல் வலைக்​குள் தட்​டி​விட்​டார். இதனால் பெல்​ஜி​யம் அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 31-வது நிமிடத்​தில் அமெரிக்கா பதிலடி கொடுத்​தது. அமெரிக்க வீரர் மாலிக் தில்​மேன் ஃபிரீ-கிக்​கில் உதைத்த பந்​து, பெல்​ஜி​யம் தற்​காப்பு அரண் மீது பலமாகப் பட்டு திசை​மாறி கோல்​கீப்​பரை ஏமாற்றி நேராக கோல்​வலையை துளைத்​தது. இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது. ஆனால் அடுத்த இரு நிமிடங்​களில் பெல்​ஜி​யம் அணி கோல் அடித்து மிரட்​டியது. 33-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி​யின் யூரி டீலெமன்ஸ் இடது விங்​கில் மார்க்​கிங் செய்​யப்​ப​டா​மல் இருந்த ட்ரோஸார்​டுக்கு பந்தை பாஸ் செய்​தார். அவர், பைலைனுக்கு அருகே இருந்து பந்தை பாக்ஸ் பகு​திக்​குள் தூக்கி அடித்​தார். அங்கு தயா​ராக இருந்த சார்​லஸ் டி கெட்​டேலேரே, அமெரிக்க அணி​யின் டிஃபென்​டர்​களுக்கு ஊடாக துள்​ளிய​வாறு தலை​யால் முட்டி பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் பெல்​ஜி​யம் அணி முதல் பாதி ஆட்​டத்​தில் 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.