Home செய்திகள் தேசிய செய்திகள் ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு

ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு

சண்டிகர்: ஆக. 17-
சிரோமணி அகாலி தளம் கட்​சித் தலை​வர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் நன்கு திட்​ட​மிடப்​பட்ட அரசியல் சதி என்​றும், இதில் ஈடு​பட்​ட​வர்​கள் உண்​மை​யான சீக்கியர்​கள் அல்ல என்​றும் அவரது மனை​வி​யும், எம்​.பி.​யு​மான ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.
மகா​ராஷ்டி​ரா​வின் நாந்​தேட் குருத்​வா​ரா​வில் கடந்த வியாழக்கிழமை பிரார்த்​தனை​யில் ஈடு​பட்​டிருந்த பஞ்​சாப் முன்னாள் துணை முதல்​வர் சுக்​பீர் சிங் பாதல் மீது, ‘நிஹாங்’ பிரிவைச் சேர்ந்த நபர் ஒரு​வர் ‘கிர்​பான்’ (சீக்​கியர்​களின் புனிதவாள்) கொண்டு தாக்​குதல் நடத்​தி​னார். இந்​தத் தாக்​குதலில் சுக்​பீர் சிங் பாதலின் வலது கையில் காயம் ஏற்​பட்​டது. சம்பவ இடத்​திலேயே தாக்​குதல் நடத்​திய நபரை காவல் துறை​யினர் கைது செய்​தனர்.