
டெல்லி: ஜூலை 21 –
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 21) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு துவங்கியது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.ராமர் கோவில் நன்கொடை திருட்டு, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தொடர் அமளி மற்றும் போராட்டங்களால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளுமே நேற்று அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தன.
இந்நிலையில் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.













