Home மாவட்டங்கள் பெங்களூர் நடிகர்திலகம் சிவாஜி நினைவு தினம்: அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை

நடிகர்திலகம் சிவாஜி நினைவு தினம்: அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை

சென்னை: ஜூலை 21-
சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், அவரது 25-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் நடிகர் பிரபுவும் உடனிருந்து மரியாதை செலுத்தினார்.
மேலும், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் மணிமண்டபத்தில் திரண்டு வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
பிரமாண்ட நூற்றாண்டு விழா:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ் சினிமாவின் சிகரமாகத் திகழ்ந்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையில் நூற்றாண்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படும்” என்று கூறினார்.