பெங்களூரு, டிசம்பர் 10-
அபூர்வ அரசியல்வாதி, மூத்த அரசியல் இராஜதந்திரி,கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சர் முன்னாள் கவர்னர் எஸ் எம் கிருஷ்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. அவருக்கு மனைவி பிரேமா, மகள்கள் சாம்பவி, மாளவிகா மற்றும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த அவர், மணிப்பால் மருத்துவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் தனது பதவிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பெங்களூருவை உலக வரைபடத்தில் இடம்பிடித்ததற்காக பெங்களூருவுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டுவந்தார். இதன் விளைவாக, பெங்களூர் இந்தியாவின் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
மே 1, 1932 இல், மாண்டியா மாவட்டம் சோமனஹள்ளியில் பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா, எம்.எல்.ஏ., சட்டப் பேரவைத் தலைவர், துணை முதல்வர், கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர், முதல்வர், ராஜ்யசபா உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சர், மகாராஷ்டிர ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வெற்றிகரமாக வகித்தார். இவரது மறைவு செய்தி கேட்டு தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.மேலும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் கர்நாடக அரசு நாளை விடுமுறை அறிவித்து உள்ளது அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எஸ் எம் கிருஷ்ணா உடலுக்கு சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (டிச.10) 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
1932-ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில் பிறந்தவர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயின்றவர். கடந்த 1962-ல் அவரது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி (1962-71), காங்கிரஸ் கட்சி (1971 – 2017) மற்றும் பாஜக-வில் (2017 – 2023) அவர் பணியாற்றி உள்ளார்.
கர்நாடக மாநில முதல்வராக 1999 முதல் 2004 வரை அவர் செயல்பட்டவர். அப்போது மாநில வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தார். பெங்களூருவின் நவீன வளர்ச்சியில் இவரது பங்கும் உள்ளது. அதே நேரத்தில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்றது மற்றும் காவிரி போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகள் அவரது ஆட்சி காலத்தில் நிலவியது.
2023-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வு காரணமாக தன்னால் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், 2009 முதல் 2012 வரை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.