ஏஐ நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

புதுடெல்லி: ஜனவரி 30-
செயற்​கை நுண்​ணறி​வு (ஏஐ) தொழில்​நுட்​ப நிபுணர்களு​டன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி டெல்​லி​யில்​ நேற்​று கலந்​துரை​யாடி​னார்​.
மத்​தி​ய அரசு சார்​பில்​ தலை நகர்​ டெல்​லி​யில்​ வரும்​ பிப்​ர​வரி 19, 20ம்​ தேதி​களில்​ ஏஐ உச்​சி மா​நாடு நடை​பெற உள்​ளது. இதற்​கு பிரதமர்​ நரேந்​திர மோடி தலை​மை தாங்​க உள்​ளார்​. பிரான்​ஸ்​ அதிபர்​ இமானுவேல்​ மேக்​ரான்​ சிறப்​பு விருந்​தின​ராக பங்கேற்கிறார். உலகம்​ முழு​வதும்​ இருந்​து 100-க்​கும்​ மேற்​பட்​ட ஏஐ நிறு​வனங்​களின்​ தலை​மை செயல்​ அதி​காரி​கள்​ மா​நாட்​டில்​ கலந்​து கொள்​கின்​றனர்​.
இதையொட்​டி இந்​தி​யா​வை சேர்ந்​த ஏஐ தொழில்​நுட்​ப நிபுணர்களு​டன்​ பிரதமர்​ மோடி டெல்​லி​யில்​ நேற்​று கலந்துரையாடி​னார்​. இதில்​ பிரதமர்​ மோடி பேசி​ய​தாவது: செயற்கை நுண்​ணறி​வு தொழில்​நுட்​பத்​தின்​ பலன்​கள்​ அனைத்​து தரப்​பு மக்​களை​யும்​ சென்​றடைய வேண்​டும். சர்​வ​தேச செயற்​கை நுண்​ணறி​வு தளத்​தில்​ இந்​தி​யா முன்​னோடி​யாக உரு​வெடுக்​க வேண்​டும். இதுதொடர்​பான ஆராய்ச்​சிகளில்​ இந்​தி​ய நிறு​வனங்​கள்​ தீவிர​மாக ஈடு​பட வேண்​டும்​.
அதே​நேரம்​ ஏஐ தொழில்​ நுட்​பம்​ தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்​க வேண்​டும்​. இந்​த தொழில் ​நுட்​பத்​தில்​ வெளிப்​படைத்​ தன்மை​யை உறு​தி செய்​ய வேண்​டும்​. இந்​தி​ய இளைஞர்​களுக்​கு ஏஐ திறன்​ சார்ந்​த பயிற்​சி வழங்​கப்​பட வேண்​டும்​. நாட்​டின்​ வளர்ச்​சிக்​கு ஏஐ தொழில் ​நுட்​பத்​தை முழு​மை​யாக பயன்படுத்திக்​ கொள்​ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்​. சென்​னை ஐஐடி, ஹைத​ரா​பாத்​ ஐஐடி, மும்​பை ஐஐடி கல்​வி நிறுவனங்​களை சேர்ந்​த ஏஐ நிபுணர்​கள்​, விப்​ரோ, டிசிஎஸ்​, எச்சிஎல்​, சோஹோ உள்​ளிட்​ட நிறு​வனங்​களை சேர்ந்​த ஏஐ நிபுணர்​கள்​ தங்​களது கருத்​துகளை பிரதமர்​ மோடி​யுடன்​ பகிர்ந்​து ​கொண்​டனர்​.